அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதில் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார்.
இதன் காரணமாக நியூயோர்க் நகரில் குடியேறி வாழ்ந்து வரும் வெளிநாட்டு அகதிகளின் தனிப்பட்ட விவரங்கள் டொனால்டினால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு தனிப்பட்ட அகதிகளின் விபரங்கள் அழிக்கப்படுவதனால் நியூயோர்க் நகரில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கு பெரிதும் சிரமம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் குற்ற வாளிகளுக்கு பெரிதும் வாய்ப்பாகி விடும் என குடியரசு கட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனைக் தொடர்ந்து நியூயோர்க் மாகாண நீதி மன்றம் நியூயோர்க் மாநகராட்சியின் உரிமம் பெற்று வசித்து வருபவர்களின் அடையாளங்களை அழிப்பதற்கு தற்காலிக தடை விதித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.