மாட்டு கோமியத்தில் தங்கபடிமம் கண்டுபிடிப்பு..! வேளாண்மை மாணவர்கள் சாதனை..!!

குஜராத் ஜீனாத் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிர் இன மாடுகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்தபோது, அதில் தங்கத்தின் படிமம் இருப்பதை
கண்டுபிடித்தனர். பின்னர் 400 மாடுகளின் சிறுநீரை தனித் தனியே ஆராய்ச்சி செய்த போது, அத்தனை மாடுகளின் கோமியத்திலும் ஒன்று போல தங்க துகள்கள் இருப்பது கண்டு வியப்படைந்தனர்.
எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இப்போதைக்கு சிறுநீரில் தங்கத்தின் துகள்கள் இருக்கிறது, என்பதுடன் அந்த மாணவர்கள் அந்த ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டார்கள்.
அதற்கான தொடர் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் நடந்து, சிறுநீரில் இருந்து தங்கம் எடுக்கும் காலம் வரலாம். விரைவான விஞ்ஞான வளர்ச்சியில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
கோமியத்திற்கு பல்வேறு கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் முக்கிய நிகழ்வுகளின் போது கோமியத்தை வீடுகளில் தெளித்து வந்தனர்.