1987 எம்.ஜி.ஆர் இறந்த போது ஓரம் கட்டப்பட்டு அவரை பார்க்கவிடாமல் அலைக்கழித்து ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தினர், அப்போது இருந்த அதிமுக நிர்வாகிகள்.
அதன் பின்புதான் வீறு கொண்டு எழுந்தார் ஜெயலலிதா. அரசியலில் ஏற்பட்ட அவமானத்திற்கு எல்லாம் வழிவகை கண்டு முதல்வரானார்.
அதற்கு முன்னரே ஜெயலலிதாவுடன் சசிகலா உள்ளார். ஜெயலலிதாவிற்கு மன்னார்குடி கூட்டம்தான் பாதுகாப்பு அரணாக இருந்தது.
சில காலத்தில் ஜெவை யார், யார் பார்க்க வேண்டும். யார் கொடுக்கும் தகவல் அவருக்கு சேரவேண்டும். யார் கட்சி பதவியில் இருக்க வேண்டும். யார் அமைச்சராக வேண்டும் என்று முடிவும் செய்யும் அதிகாரம் மன்னார்குடி கூட்டத்திற்கு வந்தது.
ஆட்டம் என்றால் ஆட்டம், அளவில்லாத ஆட்டம். ஒடுக்க நினைத்த சோ.ராமசாமி பேச்சும் எடுபடாமல் போனது. மோடி அனுப்பிய மருத்துவ உதவியாளராலும் முடியல.
என்ன செய்வது என்று காத்து இருந்த பாஜவிற்கு கிடைத்தது அல்வா. அதுதான் பெங்களுர் நீதி மன்ற தீர்ப்பு. தப்பிக்க உதவியை நாடினர்.
அதிமுக அப்போது முதல் இப்போது வரை மத்திய அரசின் சொல்படிதான் நடக்கிறது. இல்லை என்றால் சசி கூட்டத்தின் மீது உள்ள வழக்கு உயிர் பெறும். மருத்துவமனையில் ஜெ., இறப்பு ரகசியமும் வெளியில் வந்து சிக்கலை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏன் இந்த வம்பு என்று சசியால் ஒதுங்கவும் முடியவில்லை. எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கவும் முடியவில்லை.
முதலமைச்சர் பதவிக்கு மோடி தனது ஆதரவாளர்களையே இருக்க வேண்டும் என்று கூறி சாதித்தார். பொது செயலாளர் பதவிக்கும் அப்படியே நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இரண்டு மாதத்தில் பெரிய மாற்றம் இருக்கும் என்று அக்டோபர் மாதத்திலேயே கூறியிருந்தார். அவரின் பேச்சை இன்று பல அரசியல் நோக்கர்கள் உண்ணிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜவிடம் எதிர்த்து நிற்பதா? மண்டியிட்டு ஆட்சியை தக்க வைப்பதா என்ற குழப்பத்தில் சசி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.