ஜெ., அப்போலோ 75 நாட்கள் நடந்தது..!? சி.சி.டி.வி.,கேமரா பதிவு காட்சிகள்..! மர்மம்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி உடல் நலகுறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

75 நாட்கள் சிகிச்சை குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல் வந்த வண்ணம் இருந்தது.

டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார் என்ற தகவலை அப்போலோ அறிவித்தது.

இந்த 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வர் என்பதால் அவருடைய சிகிச்சை என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும்.

நாட்டு மக்களுக்கு தெரியவேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இது குறித்து எழுந்துள்ள சில கேள்விகள்:

* முதல்வர் ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை செய்யவில்லை?   பணபற்றாக்குறையா அல்லது ஆள் பற்றாக்குறையா..?

* அப்பல்லோ ஏன் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை & ஜெ.உடல் நிலையை புதிராக்கியது ஏன்..?

* மருத்துவமனையில் இவருடன் கூடவே இருந்தவர்கள் யார்..? யார்..?

* இறப்பிற்கு முந்தின நாள் வரை குணமாகிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் திடீர் என மாரடைப்புக்கு ஆட்பட்டது எப்படி..?

* மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளன்று ஜெ.,வை யாரெல்லாம் சென்று பார்த்தனர்..?
* இதுவரை அறிக்கைவிடாத அப்போலோ நிர்வாகம் இறப்பு அன்று மணிக்கு ஒரு முறை அறிக்கை விட்டது ஏன்..?

* முதல்வர் என்பவர் மாநிலத்திற்கே சொந்தமானவர். யாருடைய பிடியில் அப்போலோ நிர்வாகம் ஜெ.,வை மாதகணக்கில் வைத்திருந்தது?

* மாரடைப்பு ஆட்பட்ட நாளுக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு, மருந்துகள் என்ன..?

* அப்போலோ சிகிச்சையில், ஜெ.,யின் ஒரு புகைப்படம் கூட வெளியிடாதது ஏன்..?

* அப்போலோ மருத்துவமனை ஜெ.,அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறுதி வரை பதிவான சி.சி.டி.வி.,கோமரா புட்டேஜ் சமர்ப்பிக்க வேண்டும்.

* மருத்துவமனையில் ஒவ்வொரு நிமிடமும் நடந்தது என்ன என்ற முழுமையான அறிக்கையை அப்போலோ நிர்வாகம் வெளியிடவேண்டும்.

* ஜெ.,விடம் கடைசியாக பேசியவர் யார்..? அது எப்போது என தெளிவுபடுத்தவேண்டும்.

* மருத்துவமனைக்கு அழைத்த வரப்படுவதற்கு அழைப்பு விடுத்தவர் யார்..?

* ஜெ.,கன்னத்தில் ஏற்பட்டுள்ள காயத்தின் காரணத்தை வெளியிடவேண்டும்..?

* மருத்துவமனையில் ஜெ.,இருந்த வரை அழுத அரசியல்வாதிகள் கண்கள், இறந்த பின் அழுக மறந்து விட்டது..?

* ஜெ.,கைது செய்து பெங்களூரு சிறையில் இருந்த போது எம்.எல்.ஏ.கள் அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்த போது கதறி அழுதார்கள், ஜெ.,இறந்த பின் பதவி ஏற்க எப்படி மனம் வந்தது?

* இறுதி சடங்கில்  ஜெ.,உடலுக்கு ஒரு எம்.எல்.ஏ.,கூட மலர் தூவ வராதது ஏன்..? ஜெ., இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம், உடன் இருந்தவர்கள் தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதியில் இருந்து ஜெ.,விடம் பெறப்பட்ட கையொப்பம் மற்றும் கைநாட்டு செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என ஜெ.,யின் உண்மை விசுவாசிகள் வலைதளம் மூலம் கேட்டு கொண்டனர்.