புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதம் அடுத்த மாதம்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசியலமைப்புச் சட்டவாக்க குழுக்களால் தயாரிக்கப்பட்ட 6 அறிக்கைகள் சம்பந்தமான விவாதத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 9,10, 11 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடாத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையாக மாற்றப்பட்டது.

இதனடிப்படையில், புதிய அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமான முதல் விவாதம் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற தினமான ஜனவரி 9 ஆம் திகதி இந்த விவாதத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நடக்கும் விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.