இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும். இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது.
மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62 ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவு–செலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின் செலவின தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.