புதிய அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் இன்று தனது கருத்துக்களை முன்வைக்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்திக் கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் தமக்கு தேவையான வாகனங்களை பயன்படுத்த வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமையவே அமைச்சர்கள் செயல்ப்பட்டனர்.
எனினும் தற்போது சுற்று நிருபங்கள் மீறப்பட்டு வருவதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எம்மை குறித்து தேடி அறிய அமெரிக்காவின் எப்.பி.ஐயின் ஆலோசனை பெறப்பட்டு, அவர்கள் வந்து விசாரணைகளுக்கான கேள்விகளை முன்வைத்து செயற்பட்டு வருகின்றனர்.
விமல் வீரவன்ச யாருக்கு வாகனத்தை கொடுத்தார் என தேடுகின்றனர். அமைச்சர் என்ற வகையில் அவருக்கு வாகனங்களை பயன்படுத்த உரிமை உள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.