ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க முயற்சித்த அவருடைய அண்ணன் மகள் தீபாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் ஈமக்கிரியை நடக்கும் இடத்திற்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியில் இருக்கும் தீபா, சசிகலா ஒருவேளை ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் எதிர்த்து களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் தனியாக எதிர்த்தால் பலம் இருக்காது என்ற காரணத்தால் தீபா, விரைவில் திமுகவில் இணையவுள்ளதாகவும், இதுகுறித்து அவர் கனிமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.