புங்குடுதீவு மாணவியான வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பதில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, புங்குடு தீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.