நாடாளுமன்றத்தில் 7 ஆவது உப குழுவின் அறிக்கையான நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உறவுகள் தொடர்பிலான அறிக்கை இன்று(10) சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றம் இன்றைய தினம் அரசியல் நிர்ணய சபையாகக் கூடவுள்ளது. இந்த அமர்வில் வழி நடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வில் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட ஆறு உப குழுக்களின் அறிக்கைக்கு மேலதிகமாக 7 ஆவது உப குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆறு உப குழுக்களினதும் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.