தந்தைக்காக பிச்சையெடுக்கும் சிறுமி! சிரியாவின் போர் அவலம்

சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போரானது தீவிரமடைந்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் நான்கு ஆண்டுகளாக இருந்த கிழக்கு அலெப்போவிலுள்ள 75 சதவீத பகுதிகளை அரசு படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போரில் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனார், பலர் கொல்லப்பட்டது மட்டுமில்லாமல் பொது சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்து வருகிறது.

குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், பள்ளி கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் கிளர்ச்சியாளார்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சிரியாவிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் போரில் காயமடைந்த ஒரு ஆண் நடக்க முடியாததால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.

அவரின் மகளான ஒரு சிறுமி தன் தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என அழுது கொண்டே சாலையில் செல்லும் ஒரு பெண்ணிடம் கையேந்தி கொண்டே கேட்பது போலவும், அதை பார்த்த அவள் தந்தை செய்வதறியாது கண்களை மூடி கொண்டு அழும் வகையில் வெளியாகியுள்ள புகைப்படம் பார்ப்போர் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.