மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினம் அன்று காலை அவருக்கும், அவரது தோழிக்கும் மிகுந்த வாக்குவாதம் ஏற்பட்டு அவரை சசிகலா கீழே தள்ளிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த செப்- 22 ஆம் திகதி இரவு ஜெயலலிதா உடல்நலக் குறைபாட்டால் சென்னை அப்பல்லோ மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 5 ஆம் திகதி இரவு அவர் உயிர் பிரிந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினமான செப்- 22 ஆம் திகதி காலை 08.30 மணியளவில் ஜெயலலிதாவுடன் அவரது தோழி ஆக்ரோசமாக நடந்து கொண்டதாகவும், ஆத்திரத்தில் அவரை கீழே தள்ளி விட்டதாகவும் தகவல் கசிந்துள்ளன.
அதாவது சசிகலா தனது குடும்பத்தாருக்கு பதவி வேண்டி ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கு ஜெ. திறமையிருந்தால் தான் பதவி கொடுக்க முடியும், ஆளுமை பதவி என்பது சாதாரண விடயமல்ல என கூறியதாக தெரிகிறது.
இது குறித்து இருவருக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற சசிகலா தனது தோழி என்று கூட பார்க்காமல் ஜெ.வை கீழே தள்ளிவிட்டாராம்.
இதைக் கண்ட இளம் பணிப்பெண் ஒருவர் வேகமாக ஓடி ஜெயலலிதாவை தூக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் இதைத் சசிகலா தடுக்கவே உடனே அந்த பணிப்பெண் பாதுகாவல் அதிகாரியை அழைக்க கதவைத் திறந்து ஓடியுள்ளார்.
ஆனால், அதற்குள் சசிகலா அப்பெண்ணை இழுத்துப் போட்டு பயங்கரமாக தாக்கி இதை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டினாராம்.
பின்பு, சசிகலா யாருக்கோ போன் செய்து ஜெயலலிதா என்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்னாள் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவளை தெரியாமல் கீழே தள்ளிவிட்டேன் என கூறிவிட்டு பாதுகாவலரை அழைத்து ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனக் கூறியதோடு 10.10 மணியளவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்ன கூறினாரோ தெரியவில்லை.
உடனடியாக, மருத்துவமனையில் தனது சொந்தங்கள் முன்னிலையில் நீதிபதியை அழைத்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளும் இளவரசியின் மகன் பெயரில் உயில் பத்திரம் எழுதப்பட்டுள்ளது என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.