தமிழச்சி என்பவர், ராம்குமார் கொலை வழக்கு மற்றும் ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஃபேஸ்புக்கில் வெளியிடுவது வழக்கம். இதற்காக, அவர் பல்வேறு வழக்குகளைச் சந்தித்துவருகிறார். இந்நிலையில், அவர் மறைந்த ஜெயலலிதாவைப் பற்றி தற்போது பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமார் செப்டம்பர் 19ம் தேதி சென்னை புழல் சிறையில் கொலை செய்யப்பட்டார் என்றும், அதற்கடுத்த சில நாளிலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவும் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 22ம் தேதி நள்ளிரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கடுத்த சில நாட்களிலேயே, உயிரிழந்துவிட்டார். இதனை தமிழகக் காவல்துறையில் பணிபுரியும் சிலர் ரகசிய தகவல் தெரிவித்தனர். செப்டம்பர் 30ம் தேதியே ஜெயலலிதா மரணம் பற்றி அறிவிக்க இருந்தனர். இதுபற்றி நானும் ஃபேஸ்புக்கில் முன்கூட்டியே பதிவிட்டேன். ஆனால், ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த சிலர், அந்த திட்டத்தை மாற்றிவிட்டு, என் மேல் வீண் பழி சுமத்தினர். பல்வேறு நாடகங்களையும், திரை மறைவு அரசியலையும் நிகழ்த்திய அவர்கள், ஒருவழியாக, இப்போதுதான் ஜெயலலிதா மரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டு உடைமையாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் தமிழச்சி தெரிவித்துள்ளார்.