மறைந்த தமிழக முதல்வரின் மரணம் குறித்து பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களும், புகைப்படங்களும் மற்றும் வதந்திகளும் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அவரின் உடலை பதப்படுத்துவதற்காக (எம்பாமிங்) கன்னத்தில் 4 புள்ளிகள் காணப்பட்ட புகைப்படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து, அவரின் கைகளில் டிரிப்ஸ் ஏற்றியதற்காக தழும்பு இல்லை, ஆனால் சோவின் கைகளில் அந்த தழும்பு இருப்பதாக இரண்டு பேரின் புகைப்படத்துடன்கூடிய தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது மிகப்பெரிய அதிர்ச்சிகரமான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவரின் தலைமுதல் தாடை வரை கட்டிய நிலையில், சுவாசக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது. இது அவரது படம் தானா என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரது கன்னத்தில் ஏற்பட்டுள்ள அந்த எம்பாமிங் தழும்புகள் அதை உறுதி செய்வது போலுள்ளது.
ஆனால், இதற்கு முன் பதப்படுத்தியிருப்பதாக வெளியான படங்களில் உள்ளதுபோன்று இந்த படத்திலும் அதே இடத்தில் புள்ளிகள் காணப்படுவது சந்தேகத்தை தூண்டியுள்ளது.
இந்த படத்தை வைத்து பார்க்கும்போது, சிகிச்சை நிலையிலேயே அவருக்கு பதப்படுத்துதல் (எம்பாமிங்)) நடத்தப்பட்டதா? அல்லது இறந்தே வைக்கப்பட்டிருந்தாரா? இல்லை சிகிச்சை அளிக்கும்போது எடுத்த படமாக இருந்தால், அந்தப் புள்ளிகள் எப்படி வந்தது? எதற்கு வந்தது என சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.