அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சைபர் தாக்குதல் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
விசேடமாக தேர்தல் சந்தர்ப்பத்தில் ஹிலரி கிளின்டன் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல் தகவல் ஊடுருவப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக கட்சி மற்றும் அவரது பிரதான ஆதரவாளரின் மின்னஞ்சல் தகவல்களை ஊடுருவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் கருத்து வெளியிடப்பட்டிருந்தன.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்க அரசாங்கத்தினால் ரஷ்யா மீது குற்றம் சுத்தப்பட்டதோடு, அவர்கள் அமெரிக்க தேர்தல்களுக்கு அவசியமற்ற அழுத்தம் பிரயோகிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யா வேண்டும் என்றே டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கும் எதிர்பாரப்பில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவின் அறிக்கையை முன்வைத்து வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானவைகள் இடம்பெற்றதனை தான் நம்புவதாக இல்லை என் ட்ரம்ப் அண்மையில் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டிருந்தார்.
விசேடமாக இம்முறை தேர்தலுக்காக ரஷ்யா தலையிட்டதென்பதனை தான் முழுமையாக நிராகரிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.