ஜெ. சமாதிக்குள் செல்போன்..! யாருடையது தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்குள் தன்னுடைய கைப்பேசி விழுந்து விட்டதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பாஜக-வின் ஆசிர்வாதம் ஆச்சாரி.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இறுதிச் சடங்கு நடத்திய பின் குழிக்குள் இறக்கப்பட்டது.

இதையடுத்து, குழிக்குள் சந்தனக் கட்டையை போட்டு முக்கியமான முகவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சசிகலாவைத் தொடர்ந்து, பாஜக வை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி சந்தனக் கட்டைகளை குழிக்குள் போட்டு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென ஆசிர்வாதம் ஆச்சாரி கையில் இருந்த செல்போன் தவறி குழிக்குள் விழுந்துள்ளது.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த நெகிழ்ச்சியுடன், அம்மாவின் சமாதிக்குள் என் போன் என செய்தியை சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார் ஆசீர்வாதம் ஆச்சாரி.