இடது பக்கமாக படுத்து தூங்குவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

பொதுவாக நேராக படுத்து தூங்குவதுதான் நல்லது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் விஞ்ஞானபூர்வமாக கூறப்படுவது என்னவெனில் இடது பக்கமாக படுத்து தூங்கினால்தான் பெரும் பயன் கிடைக்கும் என்பதுதான். இடது பக்கமாக படுத்து தூங்குவதால் என்னென்ன பலன் என்று பார்ப்போமா?

1. இடது பக்கமாக தூங்கும் போது நிணநீர் வடிகால் மூலம் டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். உடலிலேயே கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அதிகம் தேங்கக்கூடும். ஆனால் இடது பக்கமாக தூங்கினால், இந்த உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படும்.

2. இடது பக்கமாக தூங்குவதால் செரிமானம் நன்கு செயல்படும். இரைப்பை மற்றும் கணையம் இயற்கையாக சந்திக்கும். இதனால் உணவு செரிமானம் சீராக நடைபெறும்.

3. இடது பக்கம் தூங்குவதன் மூலம், அசிடிட்டியை உண்டாக்கிய இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய் வழியே மேலே ஏறுவது தடுக்கப்பட்டு, இதனால் நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.

4. கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து செரிமானத்திற்கு தேவையான பித்தநீர் சுரக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதிலும் இடது புறமாக தூங்கும் போது, பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடல் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படும்.

5.இடது பக்கமாக தூங்கும் போது, உண்ட உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படும். இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றலாம்.