மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடி வரும் கேப்டன் கோஹ்லி, சதம் என்ற சாதனை மட்டுமின்றி மொத்தம் 8 சாதனைகள் செய்துள்ளார். அவர் என்னென்ன என்று தற்போது பார்ப்போம்
1. 52-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இது 15-வது சதமாகும். நான்கு வருடத்தில் இந்த 15 சதங்களையும் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
2. 51 போட்டிகளில் 3959 ரன்கள் எடுத்திருந்தார். இன்று 41 ரன்கள் எடுத்திருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 4000 ரன்களை தாண்டினார்.
3. இந்த வருடத்தில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை தாண்டியுள்ளார்.
4. 2016-ம் ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 36 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2492 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஜோ ரூட் 40 போட்டிகளில் விளையாடி 2399 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார்.
5. 2011-ம் ஆண்டிற்குப் பிறகு ஒரே வருடத்தில் 1000 ரன்களை தாண்டிய இந்திய வீரர் விராட் கோலிதான்.
6. மூன்று வகை கிரிக்கெட்டிலும் சராசரியாக 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். டெஸ்டில் 50.07, ஒருநாள் போட்டியில் 52.93 மற்றும் டி20 கிரிக்கெட்டில் 57.13 சராசரியும் வைத்துள்ளார்.
7. சச்சின் (1997), ராகுல் டிராவிட் (2006) ஆகியோர் கேப்டனாக இருந்து ஒரே வருடத்தில் 1000 ரன்கள் அடித்துள்ளனர். அதன்பின் தற்போது விராட் கோலி 1000 ரன்களை தாண்டியுள்ளார்.
8. கேப்டனாக இருந்து ஒரே தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கவாஸ்கர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்