நலம் தரும் நடராஜர் தரிசனம்

சிவபெருமானின் தரிசனம் பார்த்தால், பிறவிகள் அனைத்திலும் பெரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அனுகூலமாகவே நடைபெறும்.

சிவபெருமானின் ஆடல் தரிசனத்தை வழிபடும் அனைவரும் வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொள்வார்கள். நடராஜர் தரிசனம் கொடுப்பது வருடத்திற்கு இரண்டு முறையாகும்.

ஒன்று ஆனித் திருமஞ்சனம், அடுத்தது மார்கழித் தரிசனம். இதை ஆருத்ரா தரிசனம் என்று அழைப்பார்கள். இந்த வருடம் ஆருத்ரா தரிசன விழா மார்கழி மாதம் 27-ந் தேதி (11.1.2017) புதன்கிழமை வருகின்றது. அன்றைய தினம் நடராஜர் தரிசனம் கண்டால் தடைகள் விலகும்.