இன்றைய காலகட்டத்தில் தொப்பை என்பது பலருக்கும் இருக்கும் மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. தொப்பையைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் சிரமப்படுவது, உடற்பயிற்சி செய்ய இயலாமல் திணறுவது உள்ளிட்ட சிலரின் செயல்கள் நம்மையும் சேர்த்து மூச்சு வாங்க வைத்துவிடுகிறது.
தினசரி செயல்களை செய்ய இடையூராக இருப்பதுடன் உடல் தோற்றத்தையும் சீரழிக்கும் இந்த தொப்பை எப்படித்தான் உருவாகிறது?
முதலில், நன்றாகச் சாப்பிட்டவுடன் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிக்கக்கூடாது. நாம் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது வயிற்றுக்குள் போய் நாம் சாப்பிட்ட உணவை அதிகமாகக் குளிர வைக்கிறது.
இவ்வாறு உணவு குளிர்வதால் உடலில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் உணவு நீர்த்துப் போய்விடுகிறது. இதனால் உணவு ஜீரணமடைதல் தாமதமாகிறது. அது அந்த இடத்திலேயே தேக்கமடைந்து கெட்ட ஆவியாகி, கொட்டாவியாக வெளியேறும்.
இப்படி நம் உடலில் தங்கும் அந்த உணவு புளித்துப்போய் கேஸ்ட்ரிக் என்பதை உருவாக்குகிறது. அதனால் அந்த நீரும் உணவும் சேர்ந்து வாத நீராக மாறி, உடலில் ஆங்காங்கே வலியையும் ஏற்படுத்துகிறது.
இதுவே காலப்போக்கில் தொப்பையையும் உண்டாக்குகிறது. இத்தகைய தொப்பை உண்டாகாமல் தடுக்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவும் சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்தும் எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம்.
சாப்பிடும் நேரங்களில் தண்ணீரைத் தவிர்த்தல் நல்லது. சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதே தொப்பை உருவாவதற்கான அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
காரணம், உணவை செரிமானம் பண்ணக்கூடிய அமிலமானது தண்ணீரை செரிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறகு உணவை செரிக்காமல் கிடப்பில் போட்டுவிடுகிறது.
இந்த உணவு கெட்ட கொழுப்பாக மாறி உடலில் ஆங்காங்கே சதை போடவும், தொப்பை உருவாகவும் காரணமாகவும் இருக்கிறது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது ஜீரண மண்டலத்தைப் பாதிக்கும். ஜீரண மண்டலம் பாதிப்படைந்தால் உடலில் பல்வேறு பிரச்னைகளும் சேர்த்தே உருவாகும்.