நாம் அன்றாடம் பல உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம். இதனால் கெமிக்கல் அதிகம் கலந்த உணவுகள் மூலம் நமது உடலின் ஆரோக்கியமானது கெட்டுப் போகிறது.
ஆரோக்கியமற்ற உணவுகள் மூலம் முதலில் நமது உடலில் உள்ள செரிமான மண்டலம் தான் பாதிக்கப்படுகிறது.
இதனால் நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிக்காமல், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி பல்வேறு உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, நமது குடலில் நச்சுக்களின் தேக்கத்தை அதிகரித்து விடுகிறது.
நமது குடலில் நச்சுக்கள் மற்றும் கிருமிகளின் தேக்கம் அதிகரிக்கும் போது, குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்புகள் உள்ளது.
இதன் காரணமாக ஒருவர் தங்களின் மேனிகளை சுத்தமாக வைப்பதோடு, உடம்பில் உள்ள குடலையும் சுத்தம் செய்ய முயற்சிகள் செய்ய வேண்டும்.
குடலை சுத்தம் செய்வதற்கு நமது உடம்பின் எந்தப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்?
- ஆற்றல் கடல் என்று கூறப்படும் தொப்புள் மற்றும் அந்தரங்க எலும்பிற்கு இடைப்பட்ட பகுதியில், அழுத்தம் கொடுத்தால், செரிமான பிரச்சனை மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்திகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படாமல் குணமாக்கப்படுகிறது.
- சீன மருத்துவத்தில், பயன்படுத்தப்படும் அக்குபிரஷர் புள்ளியை கைவிரல் அல்லது ஊசியால் அழுத்தம் கொடுக்கும் போது, அது உடல் முழுவதுமாக சீரான ஆற்றலை வழங்கி, நோயெதிர்ப்பு மண்டலம், செரிமான மண்டலம், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தடுத்து, அவற்றின் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.
- அக்குபிரஷர் முறையை பயன்படுத்தி, நமது உடலின் முக்கியமான இப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், வயிறு உப்புசம், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்புபோக்கு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
- ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலை ஒன்றாக ஒட்டி, தொப்புளுக்கு கீழே வைத்து, மென்மையாக அழுத்தம் கொடுத்து, ஆழமாக மூச்சு விட வேண்டும். இந்த பயிற்சியை நின்று, உட்கார்ந்து, படுத்து கொண்டு போன்ற எந்த முறையினாலும் செய்யலாம். இதனால் நமது உடலின் ஆற்றல் தூண்டப்படுகிறது.
- நாம் ஆற்றல் கடல் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து வந்தால், உடலுறவின் போது ஏற்படும் பாலுணர்வு அதிகம் தூண்டப்பட்டு, எளிதில் உச்சக்கட்ட இன்பம் அடைவதற்கு உதவி செய்கிறது.