நடிகை கெவுதமி ஜெயலலிதா மரணம் விடயத்தில் உள்ள மர்மத்தை அவிழ்க்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வைத்துள்ள கோரிக்கை சரியானது தான் நடிகரும், பா.ஜ.க உறுப்பினருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் ரகசியம் பேணப்பட்டது ஏன்? என்பது குறித்து நடிகை கௌதமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அதிமுக உறுப்பினரும் தற்போது பா.ஜ.க கட்சியில் இருப்பவருமான எஸ்.வி.சேகர் இது சம்மந்தமாக அளித்த பேட்டியில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு நடிகை மட்டுமல்ல தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்.
இது ஜனநாயக நாடு அதனால் மறைந்த ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது என தெரிந்து கொள்ள அனைவருக்கு தார்மீக உரிமையுள்ளது.
இது சம்மந்தமாக நடிகை கெவுதமி மோடிக்கு எழுதியுள்ள கடிதம் சரியானது தான் எனவும் அவர் கூறியுள்ளார்.