அக்குபிரஷர் என்பது நமது உடம்பின் உயிரோட்டப் பாதைகளின் ஒரு புள்ளியில், நம்முடைய வெறும் விரலை வைத்து அழுத்தம் கொடுப்பது ஆகும்.
இது மாதிரியான அக்குபிரஷர் முறையை மயக்க நிலையில் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், கரண்ட் ஷாக் அடித்தவர்கள் போன்றவர்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த அக்குபிரஷர் முறையின் மூலம் கால்வலி, மூட்டுவலி, கழுத்துவலி, தலைவலி ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பு சம்பந்தப் பட்ட கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
அக்குபிரஷரை போலவே EFT தெரபி முறையானது, (EFT- Emotionally focused therapy) புதிதாக பின்பற்றப்படுகின்ற பிரபலமான முறையாகும்.
இந்த முறையானது, நம்முடைய மனதில் உள்ள அதிகப்படியான மன அழுத்தத்தை குறைத்து, முழுமையாகவே மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறச் செய்கிறது.
மணிக்கட்டு பகுதியை அழுத்துவதால் என்ன நடக்கும்?
நாம் கடிகாரம் கட்டும் நமது கைகளின் மணிக்கட்டுப் பகுதியின் கீழ் பகுதியில், நம்முடைய மூன்று விரல்களை கொண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின் கட்டை விரலால், தசை நாண்களின் மையத்தில் உள்ள புள்ளியில் வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இது போன்ற முறையை நம்முடைய கை, கால்கள், கண், மூக்கு, போன்ற அனைத்து உறுப்புகளிலும் செய்து வர வேண்டும். இதனால் கண் இமைகள், கண் புருவம், தலைமுடி போன்றவை நன்றாக வளரும்.
மேலும் நமது உடம்பில் உள்ள எலும்புகள் வலுவடைந்து, கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது.