மதவாதமும் அரசாங்கமும் அரசியல் தீப்பொறி!

தமி­ழர்­களின் தாயகப் பிர­தே­சத்­தையும், தாயகப் பிர­தே­சத்­திற்­கான உரிமைக் குர­லையும் இல்
லாமற் செய்­வ­தற்­கா­கவும், அந்த அர­சியல் கோரிக்­கையை முறி­ய­டிப்­ப­தற்­கா­க­வுமே வடக்­கிலும் கிழக்­கிலும் தமி­ழர்­க­ளு­டைய பூர்­வீகப் பிர­தே­சங்­களில் வலிந்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை அர
சுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கின்­றன.

இலங்கை அர­சி­யலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்­களும் இந்த வரு­டத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. சகிப்புத் தன்மை, விட்­டுக்­கொ­டுத்து இணைந்து வாழ்தல், மற்­ற­வர்­க­ளு­டைய உரி­மை­களை மதித்தல், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டி, நீதி­யான செயற்­பா­டு­களை ஊக்
கு­வித்தல், மனித உரி­மை­களை மதித்துச் செயற்­ப­டுதல், நீதியை நிலை நாட்­டுதல், இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு இழப்­பீடு வழங்­குதல் போன்ற பல விட­யங்­களில் இலங்கை அரசு அர­சியல் ரீதி­யாக இன்னும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

பாராளு­மன்­றத்தில் நடை­பெற்ற புத்த சாசன அமைச்சு தொடர்­பி­லான குழு­நிலை விவாதம் இதனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த அமர்­வின்­போது, கடும் வாதப் பிர­தி­வா­தங்­களும், கடும் போக்­கி
லான வார்த்தைப் பிர­யோ­கங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஒரு ஜன­நா­யக நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில்கருத்துப் பரி­மா­றல்கள், விவாதங்கள் என்­பன இடம்­பெ
று­வது அவ­சியம். ஜன­நா­யக உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­வ­தற்கும், ஜனநா­யகச் செயற்­பா­டுகள் மேம்­ப­டு­வ­தற்கும் இத்­த­கைய செயற்­பா­டுகள் வழி சமைக்கும். ஊக்­கு­விப்பாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆயினும் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் இந்தத் திக­தியில் இடம்­பெற்ற வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் வார்த்தைப் பிர­யோ­கங்­களும் அவற்றைப் பார்த்­த­வர்­களின் மனங்­களில் அச்­சத்தை ஊட்­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தன.

பல இன மக்­களும், பல மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் வாழ்­கின்ற இந்த நாட்டில், இன ஒற்­றுமை, மத ஒற்­றுமை. இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்க வாழ்க்கை முறை என்­ப­வற்­றுக்கு என்ன நடக்கப் போகின்­றதோ என்ற எதிர்­காலம் பற்­றிய பீதியை பாராளு­மன்­றத்தின் இந்த அமர்வு ஊட்­டி
யி­ருப்­ப­தையே காண முடிந்­தது.

வடக்கில் பௌத்த விகா­ரை­களை அமைக்கக் கூடாது என்ற வட­மா­காண சபையின் தீர்­மா­னத்­திற்கு பாராளு­மன்­றத்தில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

இன­வா­தத்தைத் தூண்டும் வகை­யி­லேயே, அந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அரச தரப்பில் கண்­டனம் வெளி­யி­டப்­பட்­டது. அந்தத் தீர்­மா­னத்­திற்கு சட்ட ரீதி­யான வலு கிடை­யாது என்றும் அங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

பௌத்த மதத்தைப் பின்­பற்­று­கின்ற பொது­மக்கள் இல்­லாத இடங்­களில் பௌத்த விகா­ரை­களை அமைக்கக் கூடாது. அத்­த­கைய இடங்­களில் புத்தர் சிலைகள் நிறு­வு­வதை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என்­பதே வட­மா­காண சபையின் தீர்­மா­ன­மாகும்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்­கள மக்கள் இல்­லாத இடங்­களில் – பௌத்த மதம் அல்­லாத வேறு மதங்­களைப் பின்­பற்­று­ப­வர்­க­ளான தமிழ் மக்கள் செறிந்து வாழ்­கின்ற இடங்­களில் விகா­ரை­களை அமைப்­பதும், புத்தர் சிலை­களை அமைப்­ப­துவும், இன ரீதி­யான மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்
கை­யாகும் என்­ப­தையே வட­மா­காண சபையின் தீர்­மானம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யா­னது மோச­மான ஒரு யுத்­தத்தின் பின்னர் இனங்­க­ளுக்­கி
டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்து­வ­தற்கு ஒருபோதும் உதவ மாட்­டாது என்­பதில் மாற்று கருத்
துக்கு இட­மில்லை.

ஆயினும் வட­மா­காண சபை நிறை­வேற்­றி­யுள்ள தீர்­மா­னத்தின் உண்­மை­யான நோக்­கத்தைப் புரிந்து கொள்­ளா­மல்தான், ஆளுந் தரப்­பினர் அதற்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யிட்­டார்கள் என்று கரு­து­வ­தற்கு இட­மில்லை.

ஏனெனில் வடக்கும் கிழக்கும் தமி­ழர்­களின் பூர்­வீக வாழ்­வி­டங்கள், அவைகள் அவர்­க­ளு­டைய தாயகப் பிர­தேசம் என்ற கருத்து நீண்ட கால­மா­கவே அர­சியல் அரங்­கு­க­ளிலும், வேறு துறை சார்ந்த அரங்­கு­க­ளிலும் ஒலித்து வந்­தி­ருக்­கின்­றது.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க வேண்டும் என்றும், இணைந்து வாழ இணங்கி வரா­விட்டால், தமிழ் மக்­க­ளுக்­கென ஒரு தனி­நாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற அர­சியல் ரீதி­யான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு, அதற்­கான சாத்­வீகப் போராட்­டங்கள் அடக்­கி
யொ­டுக்­கப்­பட்ட பின்­ன­ணியில் ஆயுதப் போராட்டம் தலை­யெ­டுக்க நேர்ந்­தி­ருந்­தது.

உள் நோக்கம் கொண்ட செயற்­பாடு

இப்­போ­துள்ள அரச தரப்­பினர் இந்த அர­சியல் பின்­ன­ணி­யையும் அதன் உண்மைத் தன்­மை­யையும் அறி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என்று கூற முடி­யாது. அதே­போன்று, வட­மா­காண சபை
யினால் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தின் உண்­மை­யான நோக்கம், அதன் பின்­னணி, அதன் உண்­மை­யான நிலைப்­பாடு என்­ப­வற்றை அரச தரப்­பினர் அறிந்­தி­ருக்க மாட்­டார்கள் என்று கருத முடி­யாது.

உய­ரிய சபை­யா­கிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு கருத்தை வெளி­யி­டும்­போது. அது­பற்­றிய விப­ரங்­க
ளையும் உண்மைத் தன்­மை­யையும் உண­ராமல் எவரும் உரை­யாற்­று­வ­தில்லை. ஆகவே, அரச தரப்­பி­ன­ரு­டைய செயற்­பாடு உள்­நோக்கம் கொண்­டது என்று கரு­து­வதில் தவறு இருக்க முடி­யாது.

தமி­ழர்­களின் தாயகப் பிர­தே­சத்­தையும், தாயகப் பிர­தே­சத்­திற்­கான உரிமைக் குர­லையும் இல்
லாமற் செய்­வ­தற்­கா­கவும், அந்த அர­சியல் கோரிக்­கையை முறி­ய­டிப்­ப­தற்­கா­க­வுமே வடக்­கிலும் கிழக்­கிலும் தமி­ழர்­க­ளு­டைய பூர்­வீகப் பிர­தே­சங்­களில் வலிந்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை அர
சுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கின்­றன.

இந்தச் செயற்­பாட்டை அடி­யொற்றி, மத ரீதி­யாக ஆக்­கி­ர­மிப்­பின்மூலம் வன்­முறை சார்ந்த எதிர்ப்
பின்றி சிங்­கள மக்­களை தமிழ் பிர­தே­சங்­களில் செறிந்து வாழச் செய்­யலாம் என்­ப­தற்­காக புத்தர் சிலை­களும், பௌத்த விகா­ரை­களும் தமிழ் மக்­க­ளு­டைய பிர­தே­சங்­களில் அமைக்­கப்­பட்டு வரு
கின்­றன என்­பது தமிழர் தரப்பின் குற்­றச்­சாட்­டாகும்.

ஆயினும் அரச தரப்­பினர் இந்தக் குற்­றச்­சாட்­டிற்கு நேர­டி­யாக முகம் கொடுக்க ஒரு­போதும் முனை
வ­தில்லை. மாறாக இந்த நாடு பல இன மக்­க­ளுக்கும் சொந்­த­மா­னது. எவ­ருக்கும் தனித்­து­வ­மான உரி­மை­யுள்ள பிர­தேசம் என்று எதுவும் கிடை­யாது. எவரும் எங்கும் வாழலாம். வடக்­கிலும் கிழக்
கிலும் சென்று வாழ்­வ­தற்கு குறிப்­பாக சிங்­கள மக்­க­ளுக்கு உரிமை இருக்­கின்­றது.

அதனை எவரும் தடுக்க முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் ஆளுந்­த­ரப்­பினர் செயற்­பட்டு வந்­துள்
ளனர். இந்தப் போக்­கி­லேயே நல்­லாட்­சிக்­கான அர­சாங்­கமும் சென்று கொண்­டி­ருக்­கின்­றது என்
பதை, வடக்கில் எந்த இடத்­திலும் பௌத்த விகா­ரை­களை அமைக்க முடியும். அதனை எவரும் தடுக்க முடி­யாது என்ற அரச தரப்­பி­ன­ரு­டைய டிசம்பர் 8 ஆம் திக­திய பாரா­ளு­மன்ற வாதம் நிலை
நாட்­டி­யி­ருக்­கின்­றது.

வெறுப்­பூட்டும் பேச்­சுக்­களும் செயற்­பா­டு­களும்

வடக்கில் பௌத்த விகா­ரை­களை அமைப்­பது மட்­டு­மல்­லாமல், முஸ்லிம் மக்­க­ளுக்கும் தமிழ் மக்
க­ளுக்கும் எதி­ரான வெறுப்­பூட்டும் வகையில் பேசியும் செயற்­ப­ட்டும் வரு­கின்ற பொது­ப­ல­சே
னாவின் செய­லாளர் ஞான­சார தேரர் மற்றும் மட்­டக்­க­ளப்பு சும­ண­ரத்ன தேரர் ஆகியோர் பற்றி முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய தினம் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்கள். பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கடந்த ஆட்­சிக்
கா­லத்தில் இருந்தே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதப் பேச்­சுக்­களைப் பேசி வரு­கின்றார்.

அது மட்­டு­மல்­லாமல் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் சில பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி
ரான வன்­மு­றை­களைத் தூண்டி, அவர்கள் மீது மேசா­மான தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்குக் கார
ண­மாக இருந்து செயற்­பட்­டி­ருந்­தார்கள். இது எல்­லோரும் அறிந்த இர­க­சி­ய­மாகும். ஆட்சி மாற்
றத்தின் பின்னர் அவர் சிறிது அமை­தி­யாக இருந்த போதிலும் மீண்டும் அவ­ரு­டைய இன­வாதப் பேச்­சுக்­களும் செயற்­பா­டு­களும் ஆரம்­பித்­து­விட்­டன.

எழுக தமிழ் பேர­ணிக்குத் தலைமை தாங்­கிய வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி
ராக வவு­னி­யாவில் இன­வாத உணர்­வு­களைக் கிளப்­பிய எதிர்ப்புப் பேர­ணியை நடத்­தி­யி­ருந்தார்.

அதில் முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு உயி­ரச்­சு­றுத்தல் விடுக்கும் வகை­யி­லான சுலோக அட்டை ஏந்திச் செல்­லப்­ப­டு­வ­தற்கும் வழி சமைத்­தி­ருந்தார். அத்­துடன் கிழக்கு மாகா­ணத்தில் இன
வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­படத் தொடங்­கி­யுள்ள சும­ண­ரத்ன தேரரின் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­காக கிழக்கு மாகா­ணத்­திற்குள் தனது பரி­வா­ரங்­க­ளுடன் பிர­வே­சிக்க முற்­பட்­டி
ருந்தார்.

அவ­ரு­டைய முயற்சி நீதி­மன்றத் தடை­யுத்­த­ரவின் மூலம் தடுத்து நிறுத்­தப்­பட்­டி­ருந்த போதிலும், அவ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த நீதி­மன்றத் தடை­யுத்­த­ரவைக் கிழிந்­தெறிந்து நீதி­மன்­றத்தை அவ
ம­திக்கும் வகையில் நடந்து கொண்­டி­ருந்தார்;. அத்­துடன் அவர் நிற்­க­வில்லை. இன­வாதச் செயற்­பா
டு­களில் ஈடு­படக் கூடாது என்­பதை வலி­யு­றுத்தும் வகையில் அரச தரப்­பினர் நடத்­திய கலந்­து­ரை
யா­டலில் குறிப்­பாக ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்ட பின்­னரும், அவர் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்லாம் மதத்தை நிந்­தித்தும் பகி­ரங்­க­மாக கருத்­துக்­களை வெளி­
யிட்­டி­ருக்­கின்றார்.

இந்தப் பின்­ன­ணியில் ஞான­சார தேரர் மற்றும் சும­ண­ரத்ன தேரர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்
கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் குரல் எழுப்­பி­யி­ருந்­தார்கள்.

ஆனால், அரச தரப்­பினர் அந்தக் குரலில் தொனித்த நியாயத் தன்­மையை உணர்ந்து கொள்ள முற்­ப
ட­வில்லை. மாறாக அந்த பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் அந்த வகையில் நியாயம் கேட்­பதைத் தடுக்
கின்ற போக்­கி­லேயே அரச தரப்­பினர் நடந்து கொண்­டனர்.

இதன் மூலம் இன­வாத கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்ற பௌத்த பிக்­கு­களின் செயற்­பா­டு­களை ஒரு வகையில் நியா­யப்­ப­டுத்­து­கின்ற வகை­யி­லேயே அரச தரப்­பி­ன­ரு­டைய கருத்து வெளிப்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.

அதே­நேரம் இஸ்லாம் மதமும், குர் ஆனும் தொடர்ச்­சி­யாக நிந்­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதனால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆத்­தி­ர­முற்­றி­ருக்­கின்­றார்கள். இதனால் அவர்கள் ஆயு­த­மேந்த நேரிடும் என்று இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா பாரா­ளு­மன்­றத்தில் இந்த விவா­தத்­தின்­போது தெரி­வித்
துள்ளார்.

முஸ்லிம் இளை­ஞர்கள் சமூக வலைத்­த­ளங்­களில் அவர்கள் தமது ஆத்­தி­ரத்தை வெளிப்­ப­டுத்­தி­யி
ருக்­கின்­றார்கள். எனவே, இஸ்லாம் மதமும், குர் ஆனும் தொடர்ந்து நிந்­திக்­கப்­பட்டால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­து­வதைத் தடுக்க முடி­யாமல் போகும்.

அத்­த­கைய நிலைமை ஏற்­பட்டால் தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­தி­ய­தனால் ஏற்­பட்ட பின்­ன
டைவைப் போன்று, நாடு மேலும் 60 ஆண்­டுகள் பின்­ன­டைவைச் சந்­திக்க நேரிடும் என்று இரா
ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கின்றார்.

மோச­மான ஒரு யுத்­தத்­திற்கு முகம்­கொ­டுத்து, இயல்பு நிலை­மைக்குத் திரும்­பு­வ­தற்­காகத் தள்ளாடிக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் இந்த எச்­ச­ரிக்கை வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. இது நாட்டின் சுபிட்­ச­மான ஓர் எதிர்­கா­லத்­திற்கு நல்ல அறி­கு­றி­யாகத் தென்­ப­ட­வில்லை.

அமைச்சர் ஹிஸ்­புல்லா விடுத்­துள்ள எச்­ச­ரிக்­கை­யா­னது முஸ்லிம் மக்கள் சம்­பந்­தப்­பட்­டது. முஸ்
லிம்கள் தொடர்­பி­லான தீவி­ர­வாதம் என்­பது பல்­வேறு விப­ரீ­த­மான விளை­வு­க­ளுக்கு வழி­கோலக் கூடி­யது. இதனை உலக நாடுகள் பல அனு­ப­வத்தில் கண்டு அல்­ல­லுற்­றி­ருக்­கின்­றன.

ஆக்­கத்தை நோக்­கிய பய­ணமே தேவை.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் ரீதி­யான தீவி­ர­வாதம் என்­பது அரச பயங்­க­ர­வா­த­மாகப் பல வடி­வங்­களில் தலை­யெ­டுத்­தி­ருந்­தன. இதன் கார­ண­மாக காலத்­துக்குக் காலம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நாட்டில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன.

இத்­த­கைய போக்கே தமிழ் மக்­களை ஆயு­த­மேந்த வேண்­டிய நிலை­மைக்குத் தள்­ளி­யி­ருந்­தது. தமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக மட்­டு­மல்­லாமல், தமது தற்­காப்­புக்­கா­கவும், தமிழ் இளை­ஞர்கள் ஆயு­தங்­களைக் கையில் எடுக்க வேண்­டிய சூழல் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

அத்­த­கைய ஒரு நிலைமை மீண்டும் நாட்டில் உரு­வா­கு­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்­தி­விடக் கூடாது. ஆயுதப் போராட்­டத்தின் வலி என்ன அதன் பாதிப்­புக்கள் என்ன என்­பதை இந்த நாடு ஏற்­க­னவே ஒரு படிப்­பி­னை­யாகப் பெற்­றி­ருக்­கின்­றது.

முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்­தத்­திற்­கான காரணம் என்ன, அந்த இழப்­புக்கள் அழி­வுகளில் இருந்து எவ்­வாறு மீள்­வது என்­ப­து­பற்றி தீவி­ர­மாகச் சிந்­தித்து நாட்டை வள­மான பாதையில் இட்டுச் செல்­வ­தற்­கான முயற்­சி­களும் நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இதற்­கான வழி­காட்­டல்­களை ஐ.நா. மனித உரிமைப் பேர­வையும், சர்­வ­தேச நாடு­களும் முன்­னெ
டுத்­தி­ருக்­கின்­றன. அதன் அடிப்­ப­டை­யி­லேயே யுத்த காலத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறும் நட­வ­டிக்­கை­களை மேற்
கொள்­ளு­மாறு ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

மோச­மான யுத்­தத்­தினால் நாட்டின் தேசி­யத்­திற்கும், அதன் ஒரு­மைப்­பாட்­டிற்கும் ஏற்­பட்­டி­ருக்
கின்ற காயங்­களை ஆற்றிக் கொண்டு முன்­னேற்­றப்­பா­தையில் அடி­யெ­டுத்து வைத்து முன்
னோக்கிச் செல்ல வேண்­டிய நிலையில் மீண்டும் ஒரு பின்­ன­டைவை சந்­திக்க நேர்­வதை அனு­ம
திக்கக் கூடாது.

முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாதச் செயற்­பா­டுகள் என்­பது உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­தப்
பட வேண்­டிய ஒரு விட­ய­மாகும். பௌத்த பிக்­குகள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்­காக அர­சாங்கம் இது­வி­ட­யத்தில் கண்டும் காணாத வகை­யி­லான ஒரு போக்கைக் கடைப்­பி­டிக்க முடி
யாது.

அது நாள­டைவில் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அளவில் மோச­மான விளை­வு­க­ளுக்கு வழி­யேற்­ப­டுத்­தி
விடும். பல்­லின மக்­களும் பல மதங்­களைச் சேர்ந்த மக்­களும் வாழ்­கின்ற ஒரு நாட்டில் மக்கள் விட்டுக் கொடுப்­பு­டனும், இணக்­கப்­பாட்­டு­டனும், நல்­லு­ற­வு­டனும் வாழ வேண்­டி­யது அவ­சியம்.

ஒரு­வரை ஒருவர் மதித்துச் செயற்­படத் தவ­றினால் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் ஏற்­ப­டு­வ
தையும், நாடு அமை­தி­யி­ழந்து அழிவுப் பாதையில் செல்­வ­தையும் எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி
யாமல் போய்­விடும்.

இன நிந்­தனை, மத நிந்­தனை என்­ப­வற்றை எந்­த­வொரு சூழ­லிலும் எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் அர­சாங்கம் அனு­ம­திக்கக் கூடாது. அவ்­வாறு அனு­ம­திப்­ப­தென்­பது பார­பட்­ச­மான ஆட்சி முறை­யா
கி­விடும்.

பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் பார­பட்­ச­மான ஆட்சி நடத்தும் அர­சாங்­கத்தை மதிக்­க­மாட்­டார்கள். அதற்கு எதி­ராகக் கிளர்ந்து எழவே முயற்­சிப்­பார்கள். இது நல்­லாட்­சிக்கு நல்­ல­தல்ல.

முன்­னைய அர­சாங்­கத்தின் எதேச்­ச­தி­காரப் போக்கில் இருந்து மீட்டு, நாட்­டையும் நாட்டு மக்­க
ளையும், ஒரு ஜன­நா­யக நல்­லாட்­சியில் வழி நடத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே புதிய அர­சாங்கம் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற பெயரில் உரு­வாக்­கப்­பட்­டது. இதற்­கா­கவே மக்கள் பேதங்­களைக் கவ
னத்தில் கொள்­ளாமல் புதிய தலை­மை­யையும் புதிய ஆட்­சி­யையும் உரு­வாக்­கு­வ­தற்­காக வாக்­க
ளித்­தார்கள்.

ஆட்சி மாற்­றத்­திற்கு வித்­திட்ட 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திக­திய ஜனா­தி­பதி தேர்தல் என்­பது மிகுந்த அச்­சு­றுத்­த­லான சூழ­லி­லேயே நடத்­தப்­பட்­டது. அப்­போ­தைய அர­சுக்கு எதி­ரான வேட்­பா­ளர்
க­ளும்­சரி, அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க முனைந்திருந்த வாக்காளர்களான பொதுமக்களும் சரி மோசமான உயிரச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தார்கள். அப்போது, மிகவும் துணிகரமாக அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.

எனவே, எதேச்சதிகாரப் போக்கில் சென்ற நாட்டின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகத் துணிந்து செயற்பட்ட மக்களின் இறைமையையும் அவர்களின் பொறுப்பையும் நல்லாட்சி அரசாங்கம் உதாசீனம் செய்துவிடக் கூடாது. இனவாதத்தைக் கக்குபவர்களையும் இனவாதம் மதவாதத்தைத் தூண்டுபவர்களையும் சட்ட ரீதியாக அணுகி அவர்களின் அழிவுக்கு வழிகோலும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிட அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பாரபட்சமான முறையில் பௌத்த பிக்குகளின் திட்டமிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு சட்டம் இடமளிக்கக் கூடாது. எவராக இருந்தாலும் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள் என்பதற்காக சிங்களம் மற்றும் முஸ்லிம் தரப்புக்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால் தொடர்ச்சியாக சட்டத்தையும் ஒழுங்கையும் மீறிச் செயற்படுகின்ற பௌத்த பிக்குகளை சட்டம் கண்டுகொள்ளாமல் இருப்பதுவும், அதற்கு ஆதரவாக அரசாங்கம் நடந்து கொள்வதும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்லதல்ல. இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம்தான் நாட்டில் நிரந்தரமான அமைதியையும் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிலைநாட்ட முடியும்.