கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த முக்கால் வாசி படங்கள் கல்லூரி காதலை மையமாகவும், குடும்ப உறவுகளை மையப்படுத்தியும் உருவாகியிருக்கும். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக இயக்குனர் பதவிக்கு ஓய்வு கொடுத்து வைத்திருந்த டி.ராஜேந்தர், தற்போது மீண்டும் அந்த பதவியை கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, தற்போது அவர் கைவசம் இரண்டு கதைகள் உள்ளதாகவும் அதில் ஒன்று கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ‘கவண்’ படத்தில் நடித்து வரும் டி.ராஜேந்தர், அந்த படம் முடிந்த கையோடு வரும் ஜனவரி 2017-ல் அப்படத்திற்கான பூஜையை போடவிருக்கிறாராம்.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்புகளில் களமிறங்கவுள்ளாராம். கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை டி.ராஜேந்தரே தயாரிக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

டி.ராஜேந்தர் கடைசியாக 2007-ஆம் ஆண்டு ‘வீராசாமி’ என்ற படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.