தெற்கு அதிவேக பாதையின் மூலம் நேற்றைய தினம் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக பாதையில் பயணித்த 60 ஆயிரம் வாகனங்கள் மூலமே இந்த வருமானம் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 17 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.