தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்ற செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இழப்பை தாங்கமுடியாமல் பலரும் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான மன்சூர் அலிகான் ஜெயலலிதா மரணிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என ஆவேசமாக கூறியுள்ளார்.
அதில், கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஒரு நிகழ்ச்சியில் அம்மையார் கலந்து கொள்கிறார், அதன் பின் பார்த்தால் நான்கு நாட்கள் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அவர் இறக்க வேண்டிய வயது இது கிடையாது, நூறு வயது வரை வாழ வேண்டியவர் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை காண்பதற்கு யாரும் அனுமதிக்கப்பட வில்லை, அவர் அப்படி என்ன மர்ம நோயால் பிடிக்கப்பட்டிருந்தாரா என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் என்கிறார்கள், அதற்கு இதயத்தை கேட்டிருந்தால் தாங்கள் கொடுத்திருப்போமே, ஜெயலலிதாவுக்காக இரண்டரை கோடி மக்கள் தொண்டர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கொடுத்திருப்பார்களே, இப்போது தான் இதய அறுவை சிகிச்சை என்பது மிகவும் எளிதாகி விட்டது என கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா அடிக்கப்பட்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சாதரண சாலை ஓரங்களில் நடக்கபடும் கொலை குற்றங்கள், சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய தலைவர் அவர் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் காண்பிக்கப்பட வேண்டும், இதற்கு பிரதாப் ரெட்டி பதில் சொல்ல வேண்டும்.
அது எப்படி மறைத்து, மறைத்து அனைத்தையும் காலி செய்துவிட்டால் என்ன அர்த்தம் எனக்கு புரியவில்லை, அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு பல பிரபலங்கள் சென்று வந்தனர், அவர்கள் அனைவரையும் பார்க்க அனுமதிக்க வில்லையே அது ஏன்.
இதற்கு காரணம் சசிகலாவாக இருக்கலாம் அல்லது அவர்களது உறவினர்களாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் தான் முதல்வர் ஜெயலலிதாவை அனுமதித்தது என ஆவேசமாக கூறியுள்ளார்.
இதற்கு வழக்கு தொடரவேண்டும், இதன் உண்மையை கண்டறிய அனைவரும் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுடன், சகுனி போல் கூட இருந்து இவ்வளவு செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுப்பதாகவும் கூறியுள்ளார். இது ஒரு அநியாயம் எனவும் கூறியுள்ளார்.
பல திரைப்படங்களை பார்த்திருக்கிறோம் அதில் தனக்கு பிடிக்காதவர்களாக இருந்தால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தால், அவர்கள் உடலில் மாட்டப்பட்டிருக்கும் கருவிகளை எடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். அது போன்று இதுவும் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.