ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து

ரஜினிக்கு நாளை பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இந்த மாதத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்து ஒன்று தயாராகியுள்ளது. அது என்னவென்றால், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த ‘கபாலி’ படத்தின் நிராகரிக்கப்பட்ட, யாரும் பார்க்காத காட்சிகளை (Deleted Scenes) வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தங்களது தலைவரின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ஒரு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்று நம்பலாம்.