அடேங்கப்பா 470 பேர் சாவு..!? எம்.ஜி.ஆர்.,இறந்தப்ப கூட இவ்வளவு பேர் சாகவில்லை..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணசெய்தி கேட்டு தமிழகத்தில் இதுவரை 470 பேர் இறந்து விட்டதாக அ.தி.மு.க.,டி.வி.,ஜெயாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 280 பேர் இறப்பையெட்டி அவர்கள் குடும்பங்களுக்கு, அ.தி.மு.க.,சார்பில் தலா ரூ 3லட்சம் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 190 பேர் மரணசெய்தி கேட்ட மரணம் அடைந்தாகவும் அவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 3லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 470 பேர் குடும்பங்களுக்கு ரூ. 14.01 கோடி வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை உருவாக்கிய மக்கள் தெய்வம் எம்.ஜி.ஆர்.,மறைவிற்கு கூட இவ்வளவு பேர் இறக்கவில்லை.

ஜெ.,விற்காக இவ்வளவு பேர் இறந்துவிட்டார்களா ? என எதிர்கட்சி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். நிவாரணத்தொகைக்காக, இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு குரூப் நக்கல் செய்வது எங்கள் காதுகளிலும் விழத்தான் செய்கிறது.