தாய்லாந்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது காதலிக்கு புரோஃபோஸ் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கை சேர்ந்தவர் Keow Wee Loong. புகைப்பட கலைஞரான இவர் Marta Sibielak என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இந்நிலையில் Keow Wee Loong தான் காதலித்து வந்த பெண்ணிற்கு வித்தியாசமாக புரோஃபோஸ் செய்ய நினைத்தார்.

இதன்படி சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பாலத்தில் ஏறிய அவர் ட்ரோன் மூலமாக ”என்னை திருமணம் செய்து கொள்வாயா” என எழுதி தன்னை படம்பிடித்து வைத்துக் கொண்டார்.

 

இந்நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு தனது தோழி Marta Sibielakவுடன் சுற்றுலா சென்ற Keow Wee Loong, பேஸ்புக்கில் அவருக்காக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார்.

இதனை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய Marta Sibielak, Keow Wee Loongவின் காதலையும் ஏற்றுக் கொண்டார்.

“ஆமாம்.. அவர் எனது காதலை ஏற்றுக் கொண்டார்” என்று Keow Wee Loong பேஸ்புக்கில் எழுதிய பதிவுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.