நடிகை சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படு பிஸியான நடிகையான ஒருவர். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் நேற்று தான் நாகசைதன்யா தம்பி அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது, இதில் குடும்ப உறுப்பினராக கலந்துகொண்டுள்ளார் சமந்தா. இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா என்று கேள்விக்கு திருமணம் நடந்த பிறகு நான் எடுக்கும் முக்கிய முடிவாக இது இருக்கும், ஆனால் முடிந்த வரை என் நடிப்பை தொடரத்தான் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.