அமெரிக்காவில் தங்களது இளம்வயது மகளை பட்டினி போட்டு சித்திரவதை செய்து உயிரிழக்க காரணமான பெற்றோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் குறித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள West Des Moines பகுதியில் குடியிருக்கும் Nicole Marie Finn (42) மற்றும் Joseph Michael Finn (42) ஆகியோரது 16 வயது மகள் நடாலி ஊட்டசத்து குறைபாடினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அதிர்ச்சி தரும் தகவலை வெளிக்கொண்டு வந்தனர்.
குறித்த பெற்றோர்கள் இருவரும் தங்களது மகள் நடாலியை இதுவரை பாடசாலையில் பதிவு செய்யவில்லை. மட்டுமல்ல ஒரே ஒரு உடையை மட்டுமே அவருக்கு உடுத்த அளித்துள்ளனர்.
பல நாட்கள் உணவு வழங்காமல் நடாலியை சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். நடாலி மட்டுமல்ல அவரது சகோதரர்கள் இருவரையும் குறித்த பெற்றோர் பட்டினி போட்டு சித்திரவதை செய்துள்ளனர்.
நடாலியுடன் சேத்து அவரது இரு சகோதரர்கலும் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரணம் ஏதும் இன்றியே தங்களது சொந்த குழந்தைகளை அந்த நபர்கள் கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். தேவையான உணவு, மருத்துவ சேவை என இதுவரை குறித்த குழந்தைகளுக்கு எதுவும் அளித்தது இல்லை என கூறப்படுகிறது.
5 மாதங்களுக்கு முன்னர் இவர்களின் அருகாமையில் வசிக்கும் ஒருவர், குழந்தைகளின் பரிதாப நிலை கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். குறித்த நாளில் நடாலி தமது சகோதரர்களுக்கு ஏதும் உணவிருந்தால் வழங்க முடியுமா என்று நடாலி விசாரித்துள்ளதாக அந்த அண்டை வீட்டார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த குழந்தைகளை மீட்ட பொலிசார் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்து மாரடைப்பு காரணமாக நடாலி உயிரிழந்ததை அடுத்து, குறித்த சம்பவத்தை கொலை குற்றமாக கருதி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.