இன்றைய ராசி பலன் 12-12-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: காலை 7.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: காலை 7.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மன தாங்கல் வரும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

  • கடகம்

    கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள்  கேட்டதை  வாங்கிதருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: காலை 7.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள்
    நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: காலை 7.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • மகரம்

    மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

  • மீனம்

    மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.