ட்ரம்ப்பிற்கு கிடைத்த பரிசு மூன்றாம் யுத்தத்திற்கான அறிகுறியா?

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், சிரியாவுக்கு எதிராக செயற்படுகின்ற முறையின் காரணமாக மூன்றாவது உலக பேர் ஏற்பட கூடும் என, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார்.

ட்ரம்பின் வெற்றிக்கு பின்னர், யுத்தம் அல்லது அரசியல் அனுபவம் இன்றி ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு செல்லும் ட்ரம்பின் தீர்மானத்தினால் சில நேரங்களில் மூன்றாம் உலக போர் ஏற்பட கூடும் என விமர்சனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ட்ரம்பின் நீண்ட கால நெருக்கமான நண்பரான Lois Pope என்பவர் தன்னிடம் உள்ள நாய் குட்டி ஒன்றை அமெரிக்காவின் எதிர்கால முதல் குடும்பத்திற்கு (First Family) வழங்க எதிர்பார்த்துள்ளனர்.

9 வார வயதை கொண்ட அந்த நாய் குட்டி Goldendoodle வகை நாய் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாய் குட்டியின் பெயர் Patton என குறிப்பிடப்படுகின்றது. அது இரண்டாம் உலக போரின் அமெரிக்க சேனாதிபதியாகிய General George Smith Patton என்பவரை நினைவு கூறும் வகையில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக Lois Pope தெரிவித்துள்ளார்.