இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மும்பையில் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையி உள்ளது

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் குவித்தது. ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன்கள் எடுத்தனர். விராத் கோஹ்லி இரட்டை சதமும், முரளிவிஜய் மற்றும் ஜெயந்த் சதமும் அடித்தனர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இன்னும் 49 ரன்களுக்குள் மீதி விக்கெட்டை இழந்துவிட்டால் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.