மேஷம்:
வருமானம் அளவாகவே இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகள் இருக்காது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். வழக்குகளில் உங்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும்.
அலுவலகத்தில் எப்போதும்போல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். மாற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் உள்ள வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் உண்டாகும். கல்விக் கட்டணம் செலுத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகளைப் பெறலாம்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 14,15,16
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,9
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12, 13, 17, 18 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
ரிஷபம்:
பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுக்கவும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும்போது, கோபத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடவேண்டாம். அதனால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வார இறுதிக்குள் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
அலுவலகத்தில் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய வாரம். மேலதிகாரிகளையும் சக பணியாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்தபடியே லாபமும் கிடைக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடிய வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
கலைத்துறையினருக்கு அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.
மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கவனம் செலுத்தமுடியாது. மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். மனக் குழப்பத்தை நீக்கி பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 15,16
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12,13,17,18 தேதிகளில் கடன் வாங்கவேண்டாம். செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பயணங்களைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் -நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த
சஷ்டி கவசந்தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
மிதுனம்:
எதிர்பார்த்தபடியே பணவரவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முக்கிய முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
அலுவலகச் சூழ்நிலை இறுக்கமாகவே காணப்படும். பணிச் சுமை அதிகரிக்கும். அதன் காரணமாக உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படலாம்.
வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் நீங்கள் எடுப்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர்களால் பிரச்னை ஏற்படாது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். சற்று கடினமாக உழைக்கவேண்டி இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஆர்வத்துடன் படிப்பதால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருப்பதற்கு இல்லை. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 15,16,20
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 9,5,6
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12,13,17,18 தேதிகளில் வெளியூர்ப் பயணங்களையும், முக்கிய முடிவுகள் எடுப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
கடகம்:
போதுமான பணவரவு இருக்காது என்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரும். குடும்ப விவகாரத்தில் உறவினர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருசிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும் மேலதிகாரிகளின் பாராட்டுகளும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பழைய கடன்களைத் திருப்பித் தருவீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் அனுகூலமாகும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களுடன் இணக்கமாக நடந்துகொண்டால் எதிர்காலத்துக்கு நல்லது. மாணவ மாணவியர் நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால், மனநிம்மதி இருக்காது. அலுவலகம் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளை கூடுதல் அக்கறையுடன் செய்யவேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 12,17,18
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,5
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12,13,15,16 ஆகிய நாள்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
சிம்மம்:
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் – மனைவி இடையில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவிமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை இந்த வாரத்தில் தொடங்கினால் சாதகமாக முடியும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே ஓரளவு வாய்ப்புகளைப் பெற முடியும். மாணவ மாணவியர்க்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுக்களும் கிடைக்கும்.
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்களுக்கு சந்தோஷம் தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 12,13,14,15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,7
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசுஇல் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
கன்னி:
பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் திடீர் செலவுகள் உங்களை திணறவைக்கும். உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எந்த விஷயத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆலோசனை செய்து முடிவு செய்யவும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும்.
அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லுவதற்கான வாய்ப்பும் உண்டாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கொள்முதலுக்குத் தேவையான சரக்குகளை வாங்குவதற்குத் தேவையான கடன் உதவி கிடைக்கும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆதரவால் கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது. மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். உடல்நலனில் கூடுதல் கவனம் தேவைப்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் சிறு சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 13, 14, 16, 17
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,5
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12, 18 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.
துலாம்:
பணவரவில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலைமை மாறும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் நண்பர்களிடம் அளவோடு பேசிப் பழகவும். முக்கிய முடிவுகள் எதுவும் எடுப்பதாக இருந்தால், நன்கு ஆலோசனை செய்து எடுக்கவும்.
அலுவலகத்தில் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய வாரம். தங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு சிறு சிறு தடைகளுக்குப் பிறகே தங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தை புதிய இடத்துக்கு மாற்றும் விருப்பம் இருந்தால் இந்த வாரமே அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. வரவேண்டிய சம்பள பாக்கியும் வந்து சேரும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். அதற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சுமாரான வாரம்தான். அக்கம்பக்கத்து பெண்களுடன் பேசும்போது பொறுமையாக இருக்கவும். அலுவலகத்தில் ஓர் இறுக்கமான சூழ்நிலையே காணப்படும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 15,16
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 12,13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,6
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12,13, 17,18 ஆகிய தேதிகளில் பயணங்களைத் தவிர்க்கவும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
விருச்சிகம்:
பணவரவு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகவே இருக்கும். அதேசமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வழக்குகளில் நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான எந்த விஷயத்திலும் இப்போது தலையிடவேண்டாம்.
அலுவலகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது. ஒருசிலருக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபார நிமித்தமாக சிலருக்கு பயணங்களை மேகொள்ள நேரும். கடன் கொடுப்பது வாங்குவதில் கவனம் தேவை.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நன்றாகப் படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சிறப்பீர்கள். ஆசிரியர், பெற்றோர்களின் பாராட்டுகளும் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனநிம்மதி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரக்கூடிய வாரமாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 12,13,17,18
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 14, 15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,9
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 14,15,16 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.
வழிபடவேண்டிய தெய்வம்:முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!
தனுசு:
நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பண வரவு இருக்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். பழைய கடன்கள் தீரும். வரவேண்டிய பாக்கித் தொகை கைக்கு வரும். உணவு விஷயத்தில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு முயற்சியின்பேரில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலையே காணப்படுகிறது. பழைய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி போட்டியாளர்களால் பிரச்னை எதுவும் இருக்காது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் நல்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். குறிப்பாக தொழில் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 12,13,14,15
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 16,17,18 மதியம் வரை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,9
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 16,17,18 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்க்கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
செலோர் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, என் வல்வினை தீர்த்தருள்வாயே
மகரம்:
பணவரவு நல்லபடியே இருக்கிறது. வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்கள் செல்லவேண்டி இருக்கும். சிறுவயது நண்பர்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு உங்களைத் தேடி வருவது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.
அலுவலகத்தில் சகஜமான நிலையே காணப்படுகிறது. ஒருசிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம்
எதிர்பார்த்தபடியே இருக்கும். பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளை இந்த வாரம் தொடங்குவது சாதகமாக முடியும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிக்கவேண்டியது அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரம் இது. உறவினர்கள் வருகையால் குதூகலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கும் அனுகூலமான வாரம்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 12,13, 15,16,17
சந்திராஷ்டம நாள்: டிசம்பர் 18 பிற்பகல் முதல்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,7
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 18-ம் தேதி வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அல்லனென்று மலர்க்கருளாயின
சொல்லனென்று சொல்லா மறைச் சோதியான்
வல்லனென்றும் வல்லார் வளம் மிக்கவர்
நல்லனென்றும் நல்லார்க்கு நள்ளாறனே
கும்பம்:
பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவன் – மனைவி இடையில் சிறு அளவில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்லவேண்டி இருக்கும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். அதனால் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரும்.வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். புதிய முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்கவேண்டாம். சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்க்கும் அளவுக்குக் கிடைக்காது. மாணவ மாணவியர்க்கு மனக் குழப்பங்களின் காரணமாக பாடங்களில் கவனம் செலுத்தமுடியாத நிலைமை ஏற்படும். பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால் மனக் குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் இது. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 17,18
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,4
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12,13,15,16 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
மீனம்:
பணவரவுக்குக் குறைவில்லை. எந்த ஒரு புதிய முயற்சியிலும் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. வயதான தாயின் உடல்நலம் பாதிக்கவும் அதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படவும் கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். இதுவரை தடைப்பட்டு வந்த சலுகைகள் இந்த வாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஈடுபாட்டுடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்கள் உங்களிடம் மிகுந்த அக்கறையுடன் நடந்துகொள்வார்கள்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு போதிய பணம் கிடைக்காது என்பதால் சற்று சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: டிசம்பர் 17,18
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 12, 13, 15,16 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் கடன் எதுவும் வாங்கவேண்டாம்.வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் – நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.