வர்தா சூறாவளி காங்கேசன்துறையிலிருந்து 400 கடல்மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி இன்று மாலை வேளையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனது நேரடி தாக்கம் நாட்டினுள் ஏற்படாவிடினும், மன்னார் வளைகுடா மற்றும் காங்கேசன்துறை கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஊடாக இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடா சூறாவளி தாக்கம் காரணமாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுடன் யாழ்ப்பாணத்திலும் மழை பெய்யக்கூடும் என காநிலை அவதானம் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு ஆந்திரா- வடதமிழகம் இடையே வர்தா புயல் இன்று கரையைக் கடக்கிறது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘வர்தா’ புயல் நிலை கொண்டுள்ளமையினால் மன்னார் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை
வர்தா புயல் நிலை கொண்டுள்ளமையினால் வடக்கு,கிழக்கு கடற்பரப்பில் இன்று (12) திங்கட்கிழமை மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் இன்றைய (12) தினம் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
வர்தா புயல் தற்போதைய நிலையில் இலங்கையின் வட கிழக்கின் காங்கேசந்துரையில் இருந்து சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், இன்று(12) அல்லது நாளை (13) இந்தியாவின் சென்னை பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இன்றைய(12) தினம் தொழிலுக்குச் செல்லவில்லை.கடல் மட்டம் அதிகதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மன்னார் கடலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. கடல் சீராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.