ஆசியாவின் ஆச்சரியம்! திருமண வைபவங்களுக்கு தயாராகும் சூரியவெவ மைதானம்

கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சூரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் திருமண வைபவங்களுக்ககா பயன்படுத்தப்படவுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தில் 4200 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சூரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இன்று நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் திருமண வைபவங்கள் நடத்துவதற்காக அந்த மைதானம் வாடகைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதஸ,

4200 மில்லியன் ரூபா எனது அமைச்சிற்கு கிடைத்திருந்தால் எத்தனை கிராமங்களை அமைத்திருக்கலாம்? கிராமபுறம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கியிருக்க முடியும்? அது மாத்திரமின்றி நிரந்தர கடன்காரர்களாக்கிவிட்டு மத்தல சர்வதேச விமான நிலையத்தை நிர்மானித்தார்கள்.

இவை அனைத்து தோல்வி திட்டங்களாகும். தற்போது இந்த சூரியவெவ சர்வதேச மைதானத்தை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாடகை அடிப்படையில் குறித்த மைதானம் திருமண வைபவங்கள் நடத்துவதற்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் மஹிந்த சிந்தனையின் கீழ் இந்த மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.