முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த 12 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்த 12 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது பூர்த்தியாகியுள்ளன.
இந்தப் 12 பேரில் நாட்டின் அதி உயர் பதவியை வகித்த நிர்வாக அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். குறித்த நபருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு, லஞ்ச மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழு, பயங்கரவாதத் தடைப் பிரிவு ஆகிய தரப்புக்களினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆகவே வழக்குத் தொடர்வதற்கு தேவையான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் விசாரணை நடத்திய தரப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.