மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகரகசியம் ஏன் என்பது குறித்து பதில் அளிக்குமாறு நடிகை கௌதமி கடிதம் எழுதியிருந்தார்.
பலரும் இதற்கு வரவேற்பு அளித்த நிலையில் மீண்டும் கௌதமி கடிதம்எழுதியுள்ளார்.
அதில், பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் தொடர்பாக மக்கள் மத்தியில்நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் இதுவரை பிரதமர் தரப்பில் எந்தவொரு பதிலும் வரவில்லை.
75 நாள் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம்கொடுத்துள்ள தகவல்களை நான் வரவேற்கிறேன், ஆனால் நான் கேட்ட கேள்விகள் அது அல்ல.
மருத்துவர்களுக்கும், நோயாளிக்கும் இடையே பல ரகசியங்கள் இருக்கலாம்,அதை பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும்.
கோடிக்கணக்கான மக்களின் கேள்வியை தான் நான் கேட்கிறேன், இதை பற்றியும்தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.