பாறையாக மாறப்போகுது பூமி…! உயிரியல் சூழல் பாதிப்பால் பலியாகப் போகும் உயிர்கள்…!! நிபுணர்களின் நிராயு

உலகமே இயற்கையின் படைப்பில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறாக நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும் அது அழிவை நோக்கிய பயணமாக மாறிவிடுகிறது.

மனிதர்களின் ஒவ்வொரு முயற்சியும் இயற்கையோடு ஒன்றிப் போக கூடியதாக இருக்க வேண்டும்.

நாம் எரிபொருள் தேவைக்காக இயற்கை வளங்களை அழிப்பதும், பாதிப்பை ஏற்படுத்துவதும் பூகோளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

2030ம் ஆண்டிற்குள் நமது எரிபொருள் தேவையை புதுப்பித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறோம்.

அப்படி செய்தால் மட்டுமே இந்த பூகோளமானது உயிரியல் சூழல் பாதிப்பில் இருந்து தப்பும்.

இல்லையென்றால் இன்னும் 33 ஆண்டுகளுக்குள் சுமார் 8 லட்சம் உயிர்கள் பலியாகும் என உயிரியல் சூழல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் புதிய பூகோள உலகுக்குள் நுழைந்துள்ளோம். இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமி பாறையாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

அப்படி மாறுமேயானால் இயற்கையை காப்பாற்ற நாம் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும்.

பருவ நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். வெயில் காலங்களில் மழை பெய்யும், மழை காலங்களில் காற்று வீசும், காற்று காலங்களில் பனி பொழியும் இதுபோன்ற சீதோஷ்ண  நிலைகள் மாறுபடலாம்.

கடந்து போன ஆண்டுகளில் பல கோடி உயிரினங்களை இழந்திருக்கிறோம். இப்படியே போனால் பூமியில் உயிர்கள் வாழக்கூடிய சூழ்நிலைகள் மாறி பூகோளம் ஒரு பாறையாக மாறிவிடும்.

பூமியில் பருவநிலை மாறாமல் இருக்க, உயிர்கள் வாழ வேண்டுமானால், இயற்கையை அழிப்பதையும், பாதிப்பை ஏற்படுத்தாமலும் பேணி பாதுகாக்க வேண்டும்.