வர்தா புயலில் சிக்குண்டுள்ள 500 இலங்கையர்கள்!

சென்னையை தாக்கிய வர்தா புயல் காரணமாக இலங்கையர்கள் சிலர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சென்னை வரையான விமான சேவையை இரத்து செய்ய ஶ்ரீ லங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தம்பதிவ யாத்திரையை மேற்கொண்டு திரும்பியுள்ள இலங்கையர்கள் சுமார் 500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் தற்போதைய நிலை இலங்கையர்களுக்கு மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், புயல் காரணமாக நாளை காலை 7 மணிவரை சென்னை விமான நிலையத்திற்காக விமான சேவையை இரத்துச்செய்ய ஶ்ரீ லங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.