தெளிவான கொள்கையின் அடிப்படையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் நடந்த ஊழல், மோசடிகளை தற்போதைய அரசாங்கத்திற்குள் நடக்காது என்று எதிர்பார்ப்பதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.