உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் – மீண்டும் உருவாகின்றது

உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் நிர்மாணிக்கும் வேலைப்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கர்தினால் மேல்கம் ரஞ்சித் இடையே நடைபெற்ற சந்திப்பினை அடுத்தே இந்த வேலைப்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் உலகின் மிகப் பெரிய நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஏற்பாட்டு குழுவிற்கு தெரிவித்திருந்தார்.

கர்தினால் மேல்கம் ரஞ்சித் அடிகளாரின் அறிவுறுத்தலிற்கு மதிப்பளித்தே கடந்த 7ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த நிர்மாணப் பணிகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.