வன்னியில் 32 ஆண்டுகளின் பின் மீண்டும் நிகழ்ந்த அதிசயம்!!

நெடுங்கேணி – ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது.

இதனால் அந்த பகுதியினர் சந்தோசத்தில் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இப்படியான ஒரு சம்பவம் 1984 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்துள்ளது. சிலர் பழங்களை பிடுங்குவதற்காக கோடரிகளைப் பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதனால் அவ்விடத்தில் பொலிஸாரும் வனவள பகுதியினரும் சென்றுள்ளனர்.

பழங்களை பிடுங்கி ஒரு கிலோ கிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து பழங்களை பிடுங்கி சாப்பிடுகின்றார்கள்.

நெடுங்கேணியில் ஒலுமடு, ஊஞ்சல்கட்டி, மருதோடை, தண்ணிமுறிப்பு மற்றும் காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் வழமைக்கு மாறாக கணிசமான அளவில் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.