வர்தா புயல் காரணமாக மக்கள் ஒரு பக்கம் அவதிப்படும் நிலையில், 22 வருடங்களாக சென்னையை மையம் கொண்டு கரையை கடக்காத புயல் இவ்வாண்டு அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் சென்னையில் கரையை கடப்பதை பல்வேறு நெட்டிசன்களும் பல்வேறு வகையில் வர்ணனை செய்து வருகிறார்கள்.
சென்னையில் வர்தா புயல் தாக்கத்தால் மரங்கள் பல வேரோடு சாய்ந்துள்ளன. மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையிலும், நெட்டிசன்கள் தங்களது இயல்பு மாறாமல் கருத்து கூறித்தான் வருகிறார்கள். அதில் சில கருத்துக்கள்.
சின்னம்மா பொதுச்செயலாளராக வருவது பிடிக்காமல்தான், அம்மாவே புயலாக மாறி வந்துள்ளார். வர்தா புயல் தன் ஜெயலலிதா அம்மா இல்லாத சோகத்தை மக்களுடன் மக்களாக தெரிவித்து கொண்டிருக்கிறது
ஜெயலலிதா அம்மா இறந்து ஏழு நாள் அரசு துக்கம் முடிந்து வருகிறது. புயல்/மழை. அதற்குக் கூடத் அம்மா பற்றி தெரிந்திருக்கிறது.
ஜெய் ஜெயலலிதா. யாருப்பா அது மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா அவர்களை அடக்கம் செய்ததால் புயல் கூட இங்கே வர பயப்படும் என்று சொன்னது?
ஒரு வாரத்திற்குள் புயல் வந்துவிட்டது பாருங்கள். இவ்வாறெல்லாம் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.