இலங்கை மற்றும் தமிழகத்தை தாக்க காத்திருக்கும் ‘சிகப்பு ரோஜா’..!

அண்மைய நாட்களாக உலக நாடுகளில் பலவற்றிலும், நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, புயல் தாக்கம் என இயற்கை அனர்த்தங்கள் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில், வங்க கடலில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் வர்தா புயலாக மாறி தமிழகம் மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருந்தது.

வார்தா புயல் தாக்கம் காரணமாக பல்வேறு சொத்துகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாரிய அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அழிவை ஏற்படுத்திய வர்தா புயலின் பெயருக்கான அர்த்தம் ‘சிகப்பு ரோஜா’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார், மாலைத்தீவு, ஓமன், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் வைத்து வருகின்றன.

அண்மையில் இலங்கை உள்ளிட்ட தமிழகத்தை தாக்கிய புயலுக்கு ‘நாடா’ என்ற பெயரை ஓமன் சூட்டியிருந்தது. மேலும், இன்றைய தினம் பாரிய அச்சுறுத்தல் விடுத்த புயலுக்கு பாக்கிஸ்தான் வர்தா என பெயர் சூட்டியது.

இந்நிலையில், உருது மொழியில் ‘வர்தா’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘சிகப்பு ரோஜா’ என்று பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.