மஹிந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் ஏன் பங்கேற்கவில்லை..! காரணம் வெளியானது

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தோல்வியடைய கூடிய வாக்கெடுப்புக்களில் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாமே அறிவித்தோம்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகவும் முக்கியமான வாக்கெடுப்பின் போது நிச்சயமாக வாக்களிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.