அமெரிக்காவில் சாதனைப்படைத்த இந்திய வம்சாவளி இரட்டை சகோதரிகள்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணிதம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் முதலான அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்திய வம்சாவளி சிறுமிகள் இருவர் சாதனைப் படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், பிளேனோ நகரில் வசித்து வருகிற இந்திய வம்சாவளியை சேர்ந்த 16 வயதான இரட்டை சகோதரிகள் ஸ்ரீயா, ஆத்யா பீசம் ஆகியோரே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இதுதவிர அவர்கள் பல்வேறான கண்டுபிடிப்பகளுக்கும் முயற்சி செய்து வருகின்றனர்.அண்மையில் ‘சச்சிஸோப்ரேனியா’ என்ற மூளை நோயை கண்டறிவதற்கு ஒரு புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

மேலும் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தை கைவிடுவதற்கான புதிய தொழில்நுட்பத்தையும் குறித்த சகோதரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் அமெரிக்க அரசினது பரிசாக (கல்வி உதவித்தொகை) 1 லட்சம் டொலர் (சுமார் ரூ.67 லட்சம்) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.