நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக கண்பார்வை இழப்பு ஏற்படலாம். சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம்.
மாறாத புண்களும் அங்கங்களை சிகிச்சை மூலம் அகற்றலும் நேரிடலாம். மாரடைப்பு முதலான இருதயநோய்கள் ஏற்படலாம். பக்கவாதம் வரலாம் போன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
உங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸ் குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம்.
இவற்றை அளவிடும் முறைகள்:
சிறுநீர் பரிசோதனை
நீரிழிவைக் கண்டுப்பிடிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும்.
ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.
1. பெனடிக் பரிசோதனை
2. டிப்ஸ்டிக் பரிசோதனை